சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 1141 ஆக அதிகரிப்பு
குவைத்தில் இருந்து வருகை தந்து திருகோணமலை தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த இருவருக்கும் கடற்படையை சேர்ந்த ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
அதன்படி சிறிலங்காவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1140 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 674 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் 457 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.