2017ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் பாரதூரமான வரி நடைமுறை

258 0

download-31-12017ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் ஊடாக பாரதூரமான வரி நடைமுறை ஒன்று பின்பற்றப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது முன்னணி சோசலிச கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜெயகொட இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் வருமானத்தில் 90 சதவீதமானது மக்களிடம் இருந்து அறவிடப்படுகின்ற வரியின் மூலமாகவே பெறப்படுகின்றது.

கடந்த முறை வரவு செலவு திட்;டத்துடன் தற்போதைய வரவு செலவு திட்டத்தை ஒப்பிடும் போது வரி மூலமான வருமானத்தை 389 பில்லியன் ரூபாவினால் அதிகரிக்க முயற்சிக்கின்றனர்.

வரி அல்லாத ஏனைய வருமானங்களை 45 பில்லியன் ரூபாவினால் மாத்திரம் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே வரி அதிகரிப்பின் மூலமாக வருவாயை ஈட்டுவதே அரசாங்கத்தின் திட்டமாகவுள்ளது எனவும் முன்னணி சோசலிச கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜெயகொட குறிப்பிட்டார்.