சிறிலங்காவில் மழையுடனான வானிலை காரணமாக 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான சாத்தியமுள்ளதாக மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அருண ஜயசேகர இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படக் கூடும் என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 19 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜனவரி முதல் மார்ச் வரையான காலப்பகுதிக்குள் சுமார் 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும் டொக்டர் அருண ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.