அமெரிக்காவில் கல்வி பயிலும் இலங்கையர்களின் எண்ணிக்கை 6.9 வீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2015ஆம் ஆண்டே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதற்கமைய அமெரிக்காவின் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 80 என ஓப்பன் டோர்ஸ் என்ற புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் சர்வதேச கல்வியை பொறுத்தவரையில் மாணவர்களின் திறமைகளையும் உலக பொருளாதாரத்தையும் புதிய வலைமைப்பையும் ஊக்குவிப்பதாக இலங்கைக்கான அமெரிக்காவின் உதவித்தலைவர் ரொபட் ஹில்டன் தெரிவித்துள்ளார்.