நாம் ஒருபோதும் பாதுகாப்பை குறைக்ககூடாது

312 0

அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தினை தளர்த்துகின்றது என்பதற்காக நாங்கள் எங்கள் எச்சரிக்கையை கைவிடக்கூடாது என சுகாதார சேவைகள் துணை இயக்குநர் பபா பலிகஹவதன தெரிவித்துள்ளார்.

தனியார் துறையினருக்கு என மே 11 ம் திகதி வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் நாளை ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் நாடு முழுவதிலும் நடைமுறைக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் தங்கள் அலுவலகங்களிற்கு கொரோனா வைரசிற்கு முன்னர் காணப்பட்ட சூழ்நிலையில் பணிக்கு சென்றமை போன்று நாளை பணிக்கு செல்லவேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் பணியாளர்கள் அலுவலகத்திற்குள் நுழைவதற்கு முன்னர்  கைளைகழுவுதல்,பணிநேரத்தின்போது முகக்கவசங்களை அணிந்திருந்தல்,போக்குவரத்தின் போது பாதுகாப்பான இடைவெளியை பேணுதல் போன்றவற்றை பின்பற்றவேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊரடங்கினை அரசாங்கம் தளர்த்தினாலும்,நாட்டில் இயல்புநிலை ஏற்பட்டாலும் ஒரு நிமிடம் கூட நாங்கள் எச்சரிக்கையை கைவிடக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் அக்கறையின்றி அலட்சியமாகயிருந்தால் வைரஸ்மீண்டும் தொற்றுநோயாக பரவும் எனதெரிவித்துள்ள அவர் இது இடம்பெறாமலிருப்பதை அனைத்து இலங்கையர்களும் உறுதி செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.