வடக்கு மக்களை பொறுத்தவரையில் அவர்களில் தீவிரவாதிகள் இருக்கலாம் ஆனால் அவர்கள் சிறிய எண்ணிக்கையிலானவர்கள் என சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர், ஒவ்வொரு சிறிலங்காவிலும் இத்தகைய தீவிரவாதிகள் உள்ளனர் என்றும் உயர்ந்த ஜனநாயக உரிமைகளைக் கொண்ட மிக முன்னேறிய நாடுகளும் கூட இதேபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொண்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாரிஸ், பிரஸ்ஸல்ஸ் மற்றும் ஐரோப்பா கூட கடந்த 18 மாதங்களாக இந்த நிலைமையை எதிர்கொண்டன. எனவே, எங்களிடம் சில தீவிரவாதிகளும் இருப்பார்கள், ஆனால் நம் வாழ்க்கையை சீர்குலைக்க இந்த தீவிரவாதம் நடைபெறுவதை பெரும்பான்மையினர் ஏற்கவில்லை என்றும் கூறினார்.
சர்வதேச அமைப்புகளில் இருந்து வெளியேறுவது குறித்து கோட்டாபய தனது நிலைப்பாட்டை தெளிவாக முன்வைத்துள்ளார். மேலும் சர்வதேச சமூகத்தினால் தடை செய்யப்பட்ட உலகின் மிகவும் பயங்கரவாத அமைப்பை தோற்கடித்தோம் என்றும் ஜனநாயகத்திற்கான போராளிகள் அனைவரும் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதை வரவேற்றனர் என்றும் குறிப்பிட்டார்.
எனவே, கோட்டாவின் கொள்கையை பின்பற்றுவதற்கும், நாட்டையும் அவரது மக்களையும் பாதுகாத்த பாதுகாப்பு படையினரை பாதுகாப்பதற்கும் மிக அவசியம் என்றும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.
தற்போது, வடக்கில் மக்கள் பரந்த வளர்ச்சி முன்னேற்றத்தையும் ஜனநாயக உரிமைகளையும் அனுபவித்து வருகின்றனர். நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்கள், உள்ளூர் மட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தேசிய அபிவிருத்திச் செயற்பாட்டில் பங்கேற்க விரும்புவதைக் காட்டியது என்றார்.
மேலும் மாகாணசபைகள்திருத்த சட்ட மூலத்திற்கு ஆதரவளித்ததன் மூலம் அந்த மக்களின் தலைவர்கள் அவர்களிற்கு துரோகமிழைத்தனர் என்றும் இது மாகாணசபையை தெரிவு செய்வதற்கான அவர்களின் உரிமைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.