இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்திய மத்திய அரசாங்கம் இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த புதன் கிழமை இலங்கை கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுப்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.
இதனையடுத்து தமிழக அரச உறுப்பினர்கள் சிலர் நேற்று பிரதமர் மோடியை சந்தித்ததாக தகவல் வெளியாகியது.
இந்தநிலையிலையே, குறித்த குற்றச்சாட்டிற்கு எவ்விதமான சான்றுகளும் இல்லை என தெரிவித்து இந்திய வெளிவிவகார அமைச்சு அதனை நிராகரித்துள்ளது.