வட மாகாண பாடசாலைகளுக்கு நேர மாற்றம்

279 0

jaffna-map-2-300x275எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி முதல் வடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, காலை 7.30 மணிக்கு பாடசாலைகளை ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 01.30 மணிக்கு முடிவடையும் என வடமாகாண கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் சீராக ஒரே நேரத்தில் இயங்க செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே, வட மாகாணத்தில் இயங்கும் மாகாண மற்றும் தேசிய பாடசாலைகள் அனைத்தையும் 2017.01.02 முதல் காலை 07.30 மணி தொடக்கம் பிற்பகல் 01.30 மணி வரை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.