புதிய அரசியலமைப்பு குறித்த இடைக்கால அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக, முழு நாடாளுமன்றமும், அரசியலமைப்பு பேரவையாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அரசியலமைப்புப் பேரவையின் கூட்டம் இன்று காலை 9 மணியளவில் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார்.
இந்த அமர்வில், அரசியலமைப்புத் திருத்தம் குறித்த உப குழுக்களின் அறிக்கையை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பிப்பார்.
அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான நியமிக்கப்பட்ட ஆறு உப குழுக்கள், வழிகாட்டுதல் குழுவுக்குச் சமர்ப்பித்திருந்த அறிக்கைகளையே பிரதமர் அரசியலமைப்புப் பேரவையில் இன்று சமர்ப்பிக்கவுள்ளார்.