அம்பன் புயலில் உயிரிழந்தோருக்கு ஐ.நா. பொது செயலாளர் இரங்கல்

305 0

இந்தியா மற்றும் வங்காள தேசத்தில் அம்பன் புயலால் பலியானோர் குடும்பத்தினருக்கு ஐ நா சபை பொது செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவான அம்பன் புயல் கடந்த புதன்கிழமை மேற்கு வங்காளத்தின் திகா கடற்கரை மற்றும் வங்காளதேசத்தின் ஹட்டியா தீவுகளுக்கு இடையேயான சுந்தரவன காடுகளையொட்டிய பகுதியில் கரையை கடந்தது.
இந்த புயலால் மேற்கு வங்காள மாநிலம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. அம்பன் புயலுக்கு மேற்கு வங்காளத்தில் 80 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இதேபோல், வங்காள தேசத்திலும் அம்பன் புயலுக்கு 10க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இந்நிலையில், இந்தியா மற்றும் வங்காள தேசத்தில் அம்பன் புயலால் பலியானோர் குடும்பத்தினருக்கு ஐ நா சபை பொது செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஐ.நா. பொது செயலாளரின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்பன் புயலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இதில் படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டும் என வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.