அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களைக் கடத்தும் படகுகளின் வருகையை கட்டுப்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளதாக அவுஸ்ரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.இந்த வெற்றியானது கடல் எல்லை பாதுகாப்பு உறுதியாக செயற்படுவதை வெளிக்கொணர்வதாகவும் குறிப்பிட்டுள்ளது.
எதிர்காலத்தில் அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமான முறையில் படகு மூலம் புகலிடம் கோர முயற்சிப்பவர்களின் எந்தவொரு படகும் இடை நிறுத்தப்பட்டுத் திருப்பிஅனுப்பப்படும் எனவும் மீண்டும் அவுஸ்ரேலிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
நவுறு மற்றும் பப்புவா நியூகினியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளை அமெரிக்காவில் குடியேற்றுவதற்கு அமெரிக்கா இணங்கியுள்ளதாகவும் அவுஸ்ரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. பெண்கள், குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் எனவும் இந்த செயற்திட்டமானதுஒரு தடவை மாத்திரமே மேற்கொள்ளப்படும் எனவும் அவுஸ்ரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது