தமிழகம் வேலூர் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் இருந்து 32 ஈழ அகதிகள் காணாமல் போனமை குறித்து ‘கியூ’ பிரிவு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தமிழகம் வேலூர் மாவட்டத்தில், ஆறு இடங்களில் இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளன.
குறித்த ஆறு முகாம்களிலும், 3,553 இலங்கை அகதிகள் தங்கியுள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் குடியுரிமை சலுகை தவிர்ந்த ஏனைய அனைத்து சலுகைகளும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகள் வெளி இடங்களுக்கு செல்ல வேண்டுமாக இருந்தால், வருவாய் துறை அலுவலர்களிடம், அனுமதி பெற்றே செல்ல வேண்டும்.
இந்நிலையில், அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை வாரம் தோறும், வருவாய் துறையினர் கணக்கெடுத்து, பொலிஸாருக்கு அறிக்கை சமர்பித்து வருகின்றனர்.
எனினும், கடந்த வாரம் குறித்த ஆறு முகாம்களிலும் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் போது 32 இலங்கை அகதிகள் காணாமல் போயுள்ளமை குறித்த தகவல் வெளியானது.
குறித்த அனைவரும் கடந்த இரண்டு மாதங்களாக காணாமல் போயுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் ‘கியூ’ பிரிவு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.