முக்கிய 26 பொருட்களுக்கே வர்த்தக வரி : அரசாங்கம் அறிவிப்பு

356 0

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 26 ; உணவுப் பொருட்களுக்கு வர்த்தக வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரிவிதிப்பு நேற்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ளது.

இதன்படி வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சீனி ,பருப்பு, செத்தல் மிளகாய்,வெள்ளைப்பூண்டு, கிழங்கு, டின் மீன், பேரீச்சம்பழம் உள்ளிட்ட 26 பொருட்களுக்கே வர்த்தகவரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிழங்கிக்காக விதிக்கப்பட்டிருந்த விலை 25 ரூபாவிலிருந்து ; 50 ரூபாவாகவும் வெள்ளைப்பூடு 40 ரூபாவிலிருந்து 50 ரூபாவுக்கும், செத்தல் மிளகாய் 25 ரூபாவிலிருந்து 100 ரூபாவாகவும், மைசூர் பருப்பு 7 ரூபாயிவிலிருந்து 10 ரூபாவுக்கும், சீனி 35 ரூபாவிலிருந்து 50 ரூபாவாகவும், ; டின் மீன் 50 ரூபாவிலிருந்து 100 ரூபாவாகவும், பேரீச்சம்பழம் 80 ரூபாவிலிருந்து 100 ரூபாவாகவும் வரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வரிவிதிப்பு கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆறுமாத காலத்திற்கு அமுல்படுத்தப்பட்டிருக்குமென நிதி அமைச்சு அறிவித்துள்ளது