புலத்சிங்ஹல மதுராவல பிரதேசத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டு பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,
வரலாற்றில் இடம்பெற்ற குறைகளை சரிசெய்து தாய் நாட்டுக்காக புதிய பயணத்தை மேற்கொள்வதற்கு நாட்டின் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் இன்று ஒன்றுபட்டுள்ளன.
எத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோதும் நாட்டினதும், மக்களினதும் வெற்றிக்காக அப்பயணத்தைத் தொடர்ந்தும் முன்கொண்டு செல்கிறோம்.
பிரிவினையைப் பார்க்கிலும் ஒற்றுமை முக்கியமானதாகும்.
இலங்கையின் வரலாற்று அடிப்படைகளையும், சிரேஷ்ட கலாசாரம் மற்றும் கீர்த்திமிக்க வரலாற்றுப் பாரம்பரியங்களையும் பேணி, அரசர்கள் காலத்திலிருந்த இலங்கையின் கீர்த்தியை மீண்டும் நாட்டில் ஏற்படுத்தி ஒரு ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
என்றும் குறிப்பிட்டார்.