பாராளுமன்றத்தில் தொழில்புரியும் பொறியியலாளர் ஒருவர் சபாநாயகரின் அக்ராசனத்தில் அமர்ந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பலான தகவல்களை ஆராயுமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய ஆலோசனை வழங்கியுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அளுவிஹாரேவினால் சபாநாயகரிடம் இது குறித்து முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.