கல்வியை வலிந்து கற்கின்ற உணர்வு ஏற்படாத வகையில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வியை போதிக்க வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆசிரியர்களைக் கேட்டுக்கொண்டார்.
யாழ்ப்பாணம் வயாவிளான் ஸ்ரீ வேலுப்பிள்ளை வித்தியாலய பரிசில் தின விழா உரும்பிராய் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற போது பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்தார்.
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிக்கும் போது இலகுவான முறையிலும், எளிதாக பின்பற்றக்கூடிய வகையிலும் கற்பிப்பதுடன் மாணவர்கள் மீது வன்சொற்களை பயன்படுத்தாது அன்பான ஆதரவான வார்த்தைப் பிரயோகத்தின் மூலம் கற்பித்தல் வேண்டும்.
மாணவர்களுக்கு தண்டனை கொடுக்கக் கூடாது என்று சட்டம் மற்றும் கல்வித்திணைக்களம் தெரிவிக்கின்ற நிலையில் ஆசிரியர்கள் மாணவர்களைத் தண்டிக்காமல் கற்பிக்க வேண்டும் என்றும் வடக்க மாகாண மதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் கேட்டக்கொண்டார்.