யாழ்ப்பாணத்தில் ஆறுமுகநாவலர் குருபூசை நிகழ்வும், மாநாடும் (காணொளி)

609 0

xccஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடும், குருபூசை நிகழ்வும்  யாழ்ப்பாணம் நல்லூர் துர்காதேவி மணிமண்டபத்தில் ஆரம்பமானது.

நல்லூர் நாவலர் மண்டபத்தில் குருபூசை நிகழ்வுகள் ஆரம்பமாகி விருந்தினர்கள் நல்லூர் ஆலயத்திலிருந்து துர்காதேவி மணிமண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் தலைவர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வடக்கு மாகாண சபை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்.

நிகழ்வின் கௌரவ அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சீ.யோகேஸ்வரன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன், ஆகியோருடன் சிறப்பு அதிதியாக நல்லூர் பிரதேச செயலர் ஆ.சிறி, யாழ்ப்பாண வலயக்கல்விப் பணிப்பாளர் ந.தெய்வேந்திரராஜா, வண்ணை நாவலர் மகா வித்தியாலய அதிபர் சு.திருநாவுக்கரசு மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.