இம்முறை வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக இலங்கை மத்திய வங்கி மற்றும் பாராளுமன்றத்தில் அதிகாரங்கள் தனியார் பிரிவிடம் கையளிக்க முயற்சிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
பொருட்கள் மற்றும் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக இணையத்தளத்தின் ஊடாக கொடுப்பனவுகள் செய்கின்ற தேசிய கொடுப்பனவு நடைமுறையொன்று உருவாக்கப்படுதல் மற்றும் இலத்திரனியல் அடையாளஅட்டை நடைமுறை அறிமுகப்படுத்தும் வரவு செலவுத்திட்டத்தின் யோசனைகளும் இந்த மனுவில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மனுவின் ஊடாக மத்திய வங்கியின் நிதி சபை, மத்திய வங்கி ஆளுநர், நிதி அமைச்சர் மற்றும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.