தற்சார்பு பொருளாதார அபிவிருத்திக்கு ஆர்வமூட்டி ஆரோக்கிய உணவை தமது வீடுகளிலேயே பெற்றுக் கொள்ளவும், கொரோனா போன்ற தொற்றுக்களில் தவிர்ந்து கொள்ளவும் ஆரோக்கிய உணவும் அழகிய வாழ்வும் திட்டம் 2020 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜாவின் வழிகாட்டுதலில் கணபதிப்பிள்ளை பொன்னம்மா பவுண்டேசன் நிதி உதவியுடன் வாழைச்சேனை தூய துளிர் அமைப்பு முப்பதாயிரம் வீட்டுத் தோட்ட செடிகள் வழங்கப்பட்டுள்ளன.