இளைஞனின் மரணம் தொடர்பில் வீரவங்சவின் மனைவி கைது செய்யப்படலாம்!!

300 0

vimaksaதேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவின் வீட்டில் மர்மமான முறையில் இறந்த லஹிரு ஜனித் திஸாநாயக்க என்ற இளைஞனின் மரணம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் வீரவங்சவின் மனைவி சஷி வீரவங்ச கைது செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இளைஞன் உயிரிழக்கும் போது அவர் பாலியல் வலுவூட்டும் மாத்திரை உட்கொண்டிருந்ததாக அவரது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தன புர வைத்தியசாலை தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

ஜனித் திஸாநாயக்க உயிரிழக்கும் போது, பாலியல் வலுவூட்டல் மாத்திரையை உட்கொண்டிருந்தாக பிரேத பரிசோதனைகளை செய்த ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் விசேட மருத்துவ நிபுணர் பீ.பி.திஸாநாயக்க தனது அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதனிடைய இளைஞனின் மரணம் சம்பந்தமாக தலங்கம பொலிஸாரினால், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவிடம் வாக்குமூலம் ஒன்றை பெற முடியாது போயுள்ளதுடன் தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய அரசியல் சக்தியின் தலையீடே இதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக வீரவங்சவிடம் வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய அனுமதி வழங்கியுள்ள போதிலும் அவர் பல்வேறு காரணங்களை கூறி, பொலிஸ் நிலையத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்குவதை தவிர்த்து வருகிறார் என தலங்கம பொலிஸ் நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த மரணம் தொடர்பாக சஷி வீரவங்ச, அவரது புதல்வி, மகன், இறந்த இளைஞனின் தாய் மற்றும் மாமா ஆகியோர் வழங்கிய வாக்குமூலம் ஒன்றுக்கொன்று முரண்பட்டது காணப்படுவதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் விமல் வீரவங்ச உயிரிழந்த இளைஞனின் தாய் மற்றும் மாமாவுக்கு பணத்தை கொடுத்து மரணம் சம்பந்தமாக கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்குமாறு அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது எனவும் பொலிஸ் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.