ஜனநாயக ஆட்சியை புதைத்து விட்டு எதேச்சதிகார ஆட்சியையே அரசாங்கம் முன்னெடுக்கிறது – ஹரிசன்

294 0

ஆட்சியைகைப்பற்றி இந்த குறுகிய காலத்திற்குள் மக்களுக்கு தற்போது போன்று நெருக்கடியை ஏற்படுத்திய அரசாங்கமொன்றை இதுவரையில் அறிந்ததில்லை.

ஜனநாயக ஆட்சியை புதைத்து விட்டு , எதேச்ச அதிகார ஆட்சியையே அரசாங்கம் முன்னெடுத்துவருவதாக குற்றஞ்சாட்டிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஹெரின்சன், அரசாங்கம் சடங்களுக்கு மேல் ஏறிநின்றாவது தேர்தலை நடத்தவே முயற்சிக்கின்றது என்றும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் ;இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

அட்சியை கைப்பற்றியதிலிருந்து இந்த குறுகிய காலத்திற்குள் நாட்டு மக்களுக்கு இது போன்ற நெருக்கடியை ஏற்படுத்திவரும் தற்போதைய அரசாங்கம் போன்ற ஒரு அரசாங்கத்தை இதுவரையில் நான் பார்த்ததில்லை.

கொரோனா வைரஸ் பரவலினால் மக்கள் பாதிப்படைந்துள்ள நிலையில் அதிலும் தமது அரசியல் இலாபத்தை பெற்றுக் கொள்வது தொடர்பிலே அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. எரிப்பொருளினால் கிடைக்கப் பெறும் இலாபத்தை மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கவில்லை.

இதேவேளை அரிசியை சலுகையான முறையில் விநியோகிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவிலை. இன்று பல அரிசி ஆலைகளில் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவதானம் செலுத்தி மக்களுக்கு சலுகையான முறையில் அரசிபெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

அரசாங்கம் கொரோனா நெருக்கடியின் மத்தியில் , பிணங்கள் மேல் ஏறியாவது அரசாங்கம் பொதுத் தேர்தலை நடாத்தும் நோக்கிலே செயற்பட்டு வருகின்றது. தேர்தலை நடாத்துவது தொடர்பில் நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் , நீதித்துறை சுயாதீனமான முடிவை எடுக்கும் என்றே நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலை தற்போதில்லை என்று நாங்கள் அறிவுறுத்தி வந்த நிலையில் , தேர்தல்கள் ஆணையாளரும் இன்னமும் 10 வாரங்களாவது பொறுத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதேவேளை 5000 நிவாரணத்தின் ஊடாக அரசாங்கம் அரசியல் நோக்கம் கருதி செயற்பட்டுவருவதாக நாங்கள் எடுத்துறைத்த போதும். கவனத்திற் கொள்ளாது இருந்த ஆணையாளர் தற்போது இந்த செயற்பாடுகளுக்கு அரசியல் வாதிகளை இணைத்துக் கொள்ள வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது அரசாங்கம் இந்த நிவாரணத்தையும் பெற்றுக்கொடுக்காது இருக்க தீர்மானம் எடுத்துள்ளது. நிவாரணம் வழங்கும் செயற்பாடுகளுக்க அரசியல்வாதிகள் இன்றி அரச ஊழியர்களின் உதவியுடன் எந்தவித இடையூறுமின்றி நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க முடியும். நாட்டில் செலவுகள் அதிகரித்துள்ளமையினால் மக்களுக்கு சலுகைகளை பெற்றுக் கொடுக்க முடியாது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு முயற்சித்து வருகின்றது. அமைச்சர் பந்துலவின் பிரசாரத்தால் மக்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தொடர்பிலும் முடிவெடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

அரசாங்கத்திடம் விவசாய துறையை முன்னேற்றுவதற்காக சிறந்த வேலைத்திட்டங்கள் எதுவும் இல்லை. இதனால் எதிர்காலத்தில் விவசாயிகள் நஞ்சறுந்தி உயிரிழக்க வேண்டிய நிலைமையும் எற்படலாம். எதுக்கென்றாலும், இராணுவத்தினரை இணைத்துக் கொண்டு செயற்பட்டு வரும் அரசாங்கம். ஜனநாயகத்தை புதைத்து விட்டு , எதேச்ச அதிகாரத்தை முன்னெடுப்பதாகவே தோன்றுகின்றது. எதிர்வரும் பொதுத் தேரர்தலில் மக்கள் இவர்களுக்கு உகந்த பாடத்தை கற்பிப்பார்கள் .