சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1275 மில்லியன் இழப்பீடு ஒதுக்கிட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த தொகையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 875 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் ஜூன் மாதம் சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக 2,031 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மதிப்பீட்டு துறை மதிப்பிட்டுள்ளது.
குறித்த பகுதி மக்களின் சொத்துக்கள் சேதமடைந்தமையினால், இடம்பெயர்ந்தவர்களுக்கு ஜூன் மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை 50,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாகவும், சுய தொழில் செய்வோருக்கு 10,000 ரூபா கொடுப்பனவு மூன்று மாதங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்ப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த வெடிப்புச் சம்பவம் காரணமாக வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களை இழந்த மக்கள் நேற்றைய தினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.