கொரோனாவை காரணம் காட்டி ’வீடுகளுக்குள் ஒளிந்திருக்க முடியாது

272 0

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, வீடுகளுக்குள் ஒளிந்திருக்க முடியாது என்றும் கொரோனாவுக்கு மத்தியிலும் நாட்டை மீள கட்டியெழுப்புவது எவ்வாறு என்பதுத் தொடர்பில் கலந்துரையாட வேண்டியுள்ளதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

தங்கல்லயில் நேற்று (20) நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.

உலக சுகாதார ஸ்தபானம் கூறுவதை போன்று இன்னும் பல ஆண்டுகளுக்கு கொரோனாவின் தாக்கம் இருக்கும் என்றும் கொரோனாவை கட்டுப்படுத்தும் வரையில் அல்லது அதற்கு மருந்து கண்டுபிடிக்கும் வரையில், இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

எனவே கொரோனாவுக்காக, வீடுகளுக்குள் ஒளிந்து வாழ முடியாது என்றும் விமான நிலையங்களை, தொழிற்சாலைகளை மூடி வைக்க முடியாது என்றும் தெரிவித்த அவர், கொரோனாவுக்கு மத்தியிலே வாழ்க்கையை எவ்வாறு மீளக் கட்டியெழுப்பலாம் என்பதுத் தொடர்பில் ஆராய வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மக்களின் வாழ்க்கையை எவ்வாறு இயல்பு நிலைக்குக் கொண்டு வருவது, பள்ளிகளை எவ்வாறு திறப்பது, விளையாட்டுகளை எவ்வாறு நடத்துவது என்பது பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.