சீன முதலீட்டாளர் குழுவொன்று சிறீலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டு, புதிய முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்து ஆராய்ந்துள்ளது.தெற்கு- தெற்கு ஒத்துழைப்புக்கான சீன பேரவையின் பிரதி பணிப்பாளர் ஷியாவோ லிம்மின் ஒருங்கிணைப்பில், 12 சீன முதலீட்டாளர்கள் சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
இவர்கள் சிறீலங்காவின் அமைச்சர்கள் பலரையும் சந்தித்து சிறீலங்காவுக்கான முதலீட்டு வாய்ப்புக்கள் பற்றிக் கலந்துரையாடியுள்ளனர்.அம்பாந்தோட்டை முதலீட்டு வலயத்தில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வம் தெரிவித்துள்ள இவர்கள் இயற்கை எரிவாயு மின்திட்டம் ஒன்றை அமைப்பதற்கும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் 150 தொழிற்சாலைகளை நிறுவவும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.அத்துடன் வடக்கிலும், கிழக்கிலும் பாரிய திட்டங்களை முன்னெடுப்பதற்கு சீன முதலீட்டாளர்கள் சிறீலங்கா அமைச்சர்களிடம் விருப்பத்தையும் தெரிவித்துள்ளனர்.