தலாய் லாமாவை உள்ளே விடாதீர்கள்: மங்கோலியாவுக்கு சீனா எச்சரிக்கை

284 0

201611190224195667_dalai-lamas-visit-to-mongolia-riles-china_secvpfதிபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவை மங்கோலியாவுக்குள் அனுமதித்தால், அந்த நாட்டுடனான தங்களது உறவு கடுமையாக பாதிக்கப்படும் என்று சீனா மிரட்டல் விடுத்துள்ளது.

திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா 4 நாள் பயணமாக மங்கோலியா நாட்டிற்கு செல்ல உள்ளார். மங்கோலியா நாட்டின் அழைப்பின் பெயரில் அவர் இந்த பயணத்தை மேற்கொள்கிறார்.

தலாய் லாமாவின் மங்கோலியா பயணத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஜெங் ஷுவாங் கூறுகையில், “ மதத்தின் பெயரில் திபெத்தை சீனாவில் இருந்து துண்டாடுவதற்கான அரசியல் நடவடிக்கைகளை வெளிநாடுகளில் தலாய் லாமா மேற்கொண்டு வருகிறார்.

தலாய் லாமாவை மங்கோலியாவுக்குள் அனுமதிக்காதீர்கள். பிரிவினை வாத நடவடிக்கைகளுக்கு இடம் அளிக்காதீர்கள். அப்படி செய்தால் மங்கோலியா நாட்டுடனான தங்களது உறவு கடுமையாக பாதிக்கப்படும்” என்று தெரிவித்தார். மங்கோலியாவுக்கும் சீனாவுக்கும் இடையே 4.2 பில்லியன் டாலர் அளவிற்கு வர்த்தக உறவு நிலவுகிறது. மங்கோலியா அதிக அளவில் சீனாவையே நம்பி உள்ளது.தலாய் லாமா எந்த நாட்டுக்குச் சென்றாலும், அதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.