முடிவுக்கு வந்தது ஜிகா வைரஸ் எமர்ஜென்சி: உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

282 0

1529142092untitled-1ஜிகா வைரஸ் மீதான அவசர நிலைப் பிரகடனத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக உலக சுகாதர நிறுவனம் அறிவித்துள்ளது.

‘ஜிகா’ வைரஸ் வேகமாக பரவிவந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம், உலக சுகாதார நிறுவனம் (WHO) சர்வதேச அவசர நிலையை அறிவித்தது.

கடந்த 2007-ம் ஆண்டு முதல் இதுவரை காய்ச்சல், எபோலா மற்றும் போலியோ காரணமாக மூன்று முறை சர்வதேச அவசர நிலையை சுகாதார மையம் பிரகடனம் செய்தது. அதேபோல், ஜிகா வைரஸ் காரணமாக 4-வது முறையாக அவசநிலை பிரகடனம் செய்யப்பட்டது.

கடந்த 8 மாதங்களாக ஜிகா வைரஸ் பாதிப்பிற்காக அவசர நிலைப் பிரகடனம் நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில், ஜிகா வைரஸ் மீதான அவசர நிலைப் பிரகடனத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக உலக சுகாதர நிறுவனம் நேற்றுஅறிவித்தது.ஜிகா வைரஸ் மற்றும் அதனோடு கூடிய பின் விளைவுகள் மக்கள் உடல் நலத்திற்கு நீண்ட காலம் அச்சுறுத்தலாக இருக்கும். அதனால், ஜிகா வைரஸ்-க்கு எதிரான வலுவான நடவடிக்கை தொடரும் என்று தெரிவித்துள்ளது.