சிறிலங்காவில் கொழும்பு, கம்பஹா ஆகியன மாவட்டங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய மாவட்டங்களில் இன்று (20) முதல் உள்ளுர் போக்குவரத்து சேவைகள் இடம்பெறும் என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர் தெரிவித்துள்ளார்.
சுகாதார பிரிவினர் வழங்கியுள்ள ஆலோசனைகளுக்கு அமைய அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே இவ்வாறு போக்குவரத்து இடம்பெறும் என அவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் நாட்களிலும் நாட்டில் கொவிட் 19 நிலைமை கட்டுப்பாட்டுக்குள் காணப்படுமாயின் திங்கட்கிழமை முதல் நாடு முழுவதிலும் போக்குவரத்து சேவைகளை வழமைப் போன்று செயற்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சின் ஆலோசனைக்கு அமைய உள்ளுர் போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.