இலங்கை அர்த்தபூர்வமான பொறுப்புக்கூறும் செயல்முறையை பின்பற்றவேண்டும் – ஜஸ்டின் ட்ருடோ

361 0

இலங்கை அர்த்தபூர்வமான பொறுப்புக்கூறும் செயல்முறையை பின்பற்றவேண்டும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் தொடர்பாகவே தனது சிந்தனைகள் அமைந்துள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இது முள்ளிவாய்க்காலின் இறுதி கட்டப்போர் மற்றும் அதன்போது இழக்கப்பட்ட உயிர்கள் உட்பட யுத்தம் குறித்து சிந்திப்பதற்கான தருணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 11 வருடங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பல கனேடிய பிரஜைகளை தான் சந்தித்துள்ளதாகவும் கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும், துன்பத்திலிருந்து மீள் எழும் தொடர்ச்சியான திறன் என்பன நிரந்தர சமாதானம் மற்றும் நல்லணிக்கத்திற்கு ஊக்குவிக்கும் எனத் தெரிவித்துள்ள அவர், அர்த்தபூர்வமான பொறுப்புக்கூறல் செயல்முறையை பின்பற்றுமாறும் இலங்கைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்தோடு, நீதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி செயற்படுபவர்களுக்கு கனடா அரசாங்கம் எப்போதும் ஆதரவினை வழங்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.