யாழ் பல்கலை மாணவர்கள் கொலை-பொலிஸாருக்கு விளக்கமறியல் நீடிப்பு(காணொளி)

326 0

jaffna-campusயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கொலையுடன் தொடபுடையவர்கள் என்ற  சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 05 பொலிஸ் அதிகாரிகளின் விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் கொலைசெய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 05 பொலிஸ் அதிகாரிகளையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இன்று யாழ். நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது,  யாழ். நீதிவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் கடந்த ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி இரு பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் குறித்த 05 பொலிஸ் அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.