கொரோா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாளாந்த வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மட்டித் தொழில் செய்யும் மக்களின் நலன் கருதி ‘வாசம் உதவும் கரங்கள்’ அமைப்பு ஒரு தொகுதி உலர் உணவுப் பொதிகளை இன்று (18) வழங்கி வைத்தது.
வாழைச்சேனை பேத்தாழை ஸ்ரீ வீரையடி விநாயகர் ஆலய நிர்வாகத்தினர் வாசம் உதவும் கரங்கள் அமைப்பினரிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து குறித்த அமைப்பின் மட்டக்களப்பு இணைப்பாளர் வே.பிரபாகரன் இவ் உதவியினை வழங்கி வைத்தார்.