யாழ் மாவட்டத்தில் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் மீண்டும் அதிகளவு வீதி விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இன்று (18) வைத்தியசாலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றினால் தற்போது யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால் வீதி விபத்துக்களினால் இக் காலப்பகுதியில் சிலர் இறந்து விட்டார்கள்.
குறிப்பாக இளைஞர்கள் மாத்திரமல்ல மோட்டார் சைக்கிளினை வழங்கும் பெற்றோர்களும், இளைஞர்களை அல்லது அவர்களுடைய பிள்ளைகளை மிக மிக அவதானமாக செலுத்துமாறு அவர்களுக்கு அறிவுரை வழங்குங்கள்.
இளைஞர்கள் இதன் ஆபத்து என்ன என்று தெரியாமல் அதிக வேகத்தில் ஓடி தங்களுடைய உயிர்களை தாங்களாகவே மாய்த்துக் கொள்கிறார்கள்.
எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் முகமாக கொண்டு மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுப்பதில் கொஞ்சம் கண்டிப்பான தன்மையினை மேற்கொள்ள வேண்டும் என வைத்திய பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.