உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க வேண்டும் –jvp

369 0

க.பொ.த. உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, ஒன்லைன் கல்வி மூலம் உயர்தர மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை முடிக்க அரசாங்கம் தயாராகிவருவதாக குற்றம் சாட்டினார்.

ஒன்லைன் கல்வி என்பது வகுப்பறையில் கற்பதற்கு சமம் இல்லை என்றும், பரீட்சைக்கு தயாராவதற்கு உயர்தர மாணவர்களுக்கு அதிக காலம் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

க.பொ.த. உயர்தர பரீட்சை என்பது மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது இந்நிலையில் ஓகஸ்ட் மாதத்தில் பரீட்சையை நடத்துவது நியாயமற்றது என்றும் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

மேலும் ஒன்லைன் மூலம் கல்வியில் ஈடுபடுவதற்கான தொழில்நுட்ப வசதிகள் பெரும்பாலான மாணவர்களுக்கு இல்லை என்றும் பிமல் ரத்நாயக்கசுட்டிக்காட்டினார்.

அத்தோடு கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடு காரணமாக தனியார் கல்வி நிறுவனங்களில் கல்வி நடவடிக்கைகளையும் அவர்கள் தொடரவில்லை என குறிப்பிட்ட அவர் சாதாரணதர மற்றும் புலமைப்பரிசில் மாணவர்களை இது பாதித்துள்ளது என்றார்.