சிறிலங்காவில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து முடிவு செய்ய ஒரு குழுவை நியமிக்கவும் – ஜே.வி.பி.

289 0

சிறிலங்காவில் பாடசாலைகள் எப்போது மீண்டும் திறக்கப்படும் மற்றும் தரம் 5, உயர்தரப்பரீட்சை, சாதாரண தரப்பரீட்சைகள் எப்போது நடைபெறும் என்பதை தீர்மானிக்க நிபுணர்களின் குழுவை நியமிக்குமாறு ஜே.வி.பி. கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடமபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, இந்த குழுவில் நிபுணர்கள், புத்திஜீவிகள், அதிபர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 11 ஆம் திகதி பாடசாலைகள் மூடப்பட்டதை சுட்டிக்காட்டிய பிமல் ரத்நாயக்க, கல்வி அமைச்சு இப்போது பாடசாலைகள் மீண்டும் எப்போது திறக்கப்படும், பரீட்சைகள் தொடர்பாக அறிவிக்க வேண்டும் என்றார்.