பிரதமர் மோடியை கண்டித்து த.மா.கா. போராட்டம்: ஜி.கே.வாசன் அறிவிப்பு

250 0

201611181254594506_gk-vasan-announcement-sturggle-prime-minister-modi_secvpfமோடியின் நடவடிக்கையை கண்டித்து வருகிற 23-ந்தேதி (புதன்கிழமை) சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே த.மா.கா. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

ரூ.1000, 500 செல்லாது என்று அறிவித்த மத்திய அரசின் முடிவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.பிரதமர் மோடியின் நடவடிக்கையை கண்டித்து த.மா.கா. போராட்டம் நடத்துகிறது. இதுபற்றி த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இன்று கூறியதாவது:-

மத்திய பா.ஜனதா அரசு மனிதாபிமான மற்ற முறையில் ஏழை எளிய, நடுத்தர மற்றும் தொழிலாளிகள் வர்க்கத்தையும் வியாபாரிகளையும் ரூ.1000, 500 நோட்டுகளை செல்லாததாக அவசர கோலத்தில் அறிவித்து மிகவும் சிரமத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது.

உடனடியாக அனைத்து தரப்பு மக்கள் குறிப்பாக ஏழைகள், வியாபாரிகள், தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாடு முழுவதும் மக்களை இன்னல்களுக்கு உள்ளாக்கி இருக்கும் மோடியின் நடவடிக்கையை கண்டித்து வருகிற 23-ந்தேதி (புதன்கிழமை) சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே த.மா.கா. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் நான் கலந்து கொள்கிறேன்.

பணப்புழக்கம் ஏற்படும் வகையில் கோட்பாடுகளை மாற்றி அமைத்து நாட்டில் நிலவும் அசாதாரண சூழ் நிலையை உடனே முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.இவ்வாறு அவர் கூறி னார்.