கொவிட்-19 பரவலைத் தொடர்ந்து அமுலாக்கப்பட்ட முடக்கநிலை காரணமாக, சிறிலங்காவில் மதுபான மற்றும் புகையிலை பயன்பாடு வீழ்ச்சி கண்டுள்ளது.
இதனை சிறிலங்கா மதுபான மற்றும் புகையிலைக் கட்டுப்பாட்டுத் தகவல் நிலையம் மேற்கொண்ட ஆய்வுகள் புலப்படுத்தியுள்ளன. முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில், இரண்டாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் மத்தியில் ஆய்வு நடத்தப்பட்டது.
இதன் பிரகாரம், மதுபான நுகர்ச்சி 80 சதவீதத்தாலும், புகைத்தல் மற்றும் புகையிலை பயன்பாடு 48 சதவீதத்தாலும் குறைந்திருக்கிறது. முடக்கநிலை காரணமாக இருபது சதவீதமானவர்கள் புகைத்தல் மற்றும் புகையிலை பயன்பாட்டில் இருந்து முற்றாக விலகியிருக்கிறார்கள் என்பது ஆய்வின்மூலம் கண்டறியப்பட்டுள்ளது.