சிறிலங்காவில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர், வளி மாசடைவு வீதம் மீண்டும் உயர் மட்டத்தை அடைந்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக கொழும்பில் தற்போது வளி மாசடைவு தன்மையானது 50 வீதமளவில் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆராயச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
சிறிலங்காவில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தியிருந்த காலகட்டத்தில் வாகனங்கள் பயணிக்காமை மற்றும் கைத்தொழிற்சாலைகள் இயங்காமை காரணமாக வளி மாசடைவு வீதம் வீழ்ச்சியடைந்திருந்தது.
இந்த நிலையில், கடந்த வாரம் ஊரடங்கு தளர்த்தப்பட்டதன் பின்னர், குறித்த நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால் வளி மாசடைவு அதிகரித்து வருவதாக தேசிய கட்டட ஆராயச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.