சிறிலங்காவில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 56,326 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 620 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்தமையைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலம் முதல் இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 56,326 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 274 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 15490 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.