தினசரி மதுக்கடைகளில் தலா 2 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும் என்று மதுபிரியர்கள் அடுக்கடுக்கான கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.
இதனால் வேறு வழியின்றி அதிவிரைவு படையினர் அவர்களை விரட்டி அடிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஏமாற்றத்துடன் வீடு திரும்புவதை தடுக்கும் வகையில் தினசரி மதுக்கடைகளில் தலா 2 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும் என மதுபிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘மதுபாட்டில்கள் வாங்க பல மணி நேரம் வரிசையில் காத்திருக்கிறோம். ஆனால், அதில் வெறும் 500 பேருக்கு மட்டுமே டோக்கன் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே வரிசையில் நிற்பவரின் தேவையை தீர்க்கும் வகையில் மதுக் கடைகளில் தினந்தோறும் 2 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும். அத்துடன் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் மதுக்கடைகள் அருகே தண்ணீர் பந்தலும் அமைக்கப்பட வேண்டும்’ என்றனர்.