எதிர்க்கட்சிப் பதவியிலிருந்து தவராசா நீக்கப்பட்டுள்ளார்

282 0

s-thavarasaவடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சின்னத்துரை தவராசா நீக்கப்பட்டுள்ளார் என ஐக்கிய மக்கள் முன்னணின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அவருக்குப் பதிலாக ஈபிடிபியைச் சேர்ந்த தவநாதன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவரை நீக்கும் உரிமை கட்சியின் தலைமைக்கு இல்லையெனவும், அதனை வடக்கு மாகாணசபை அவைத்தலைவரே முடிவு செய்யவேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா செவ்வியின்போது தெரிவித்திருந்தார்.

முறைப்படி கட்சி தன்னை அணுகியிருந்தால், தான் பதவியை விட்டு விலகியிருப்பேன் எனவும், கட்சி அவ்வாறு செய்யாததால் தான் தனது பதவியை விட்டு விலகப்போவதில்லையெனவும் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், தவராசா எதிர்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகாவிட்டால், அவரை கட்சியிலிருந்து நீக்கப்போவதாக ஈபிடிபியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.