கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி முதல் இன்று (16) காலை 6 மணிவரையான காலப்பகுதியில் 12,482 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக சிறிலங்கா பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதில் 4808 பேர் தண்டணைக்குரிய குற்றவாளிகள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை நேற்று காலை 6 மணி முதல் இன்று (16) காலை ஆறு மணிவரையான 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 559 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கமைய கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 55,506 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 15,216 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சிறிலங்கா பொலிஸ் ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.