படையினரால் விடுவிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் பலர் மீள்குடியமராமல் இருப்பது கவலையளிக்கிறது என்று யாழ்ப்பாணம் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.
கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் போரால் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு தியாகி அறக்கட்டளையினால் வீடு ஒன்று அமைத்து வழங்கப்பட்ட நிகழ்வு இன்று (16) இடம்பெற்ற போது இதனை தெரிவித்தார். மேலும்,
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முப்படையினர் வசமிருந்த பெருமளவு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. அவை உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
தற்போது இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியன பொதுமக்களின் மிகக் குறைதளவான காணிகளிலேயே முகாமை அமைத்து உள்ளன.
எனினும் விடுவிக்கப்பட்ட காணிகள் பலவற்றின் மக்கள் மீள்குடியமரவில்லை. அவர்களது காணிகள் படையினரிடமிருக்கும் போது செழிப்பாக இருந்தன. எனினும் இப்போது பராமரிப்புகளற்று பற்றைக் காணிகளாக உள்ளன. – என்றார்.