புதிய கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளார் மகிந்த!

294 0

download-14முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜிஎல்.பீரிஸ் தலைமையில் உருவாக்கப்பட்ட சிறீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைப் பொறுப்பை சிறீலங்காவின் முன்னாள் ஆட்சிசாளர் மகிந்த ராஜபக்ஷ ஏற்கவுள்ளார் என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பந்தரமுல்லையிலுள்ள மகிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் நேற்று முன்னதினம் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

இதன்போது முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ தான் பொதுஜன முன்னணியில் முதலாவது உறுப்பினராக இணைந்துகொண்டமைக்கான அடையாள அட்டையைக் காண்பித்தார்.

மேலும், அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில், சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவின் அரசியல் கொள்கைத் திட்டத்தினடிப்படையிலேயே இப்புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவரே இக்கட்சிக்குத் தலைமை தாங்குவார் எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.