வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகளை விமர்சனத்திற்கு உட்படுத்தும் வகையில் சிங்கள மொழியில் பாடலொன்று வெளியாகியுள்ளது.
இந்த பாடலை தென்னிலங்கையிலுள்ள பிரபல செய்தி இணைய ஊடகங்கள் அதிகளவில் பகிர்ந்து வருவதனை காணக்கூடியதாக உள்ளது.
சமஷ்டியை கோரும் முதலமைச்சர் விக்னேஸ்வரனை வெளியேற்ற வேண்டும் உட்பட அவ மரியாதைக்கு உட்படுத்தும் வகையிலான மோசமான வசனங்கள் இந்த பாடலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.