வங்கக்கடலில் இன்று மாலை உருவாகிறது ஆம்பன் புயல்

293 0

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று இன்று மாலை புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருப்பதாகவும், இதுமேலும் வலுப்பெற்று இன்று மாலை புயலாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ஆம்பன் புயல் என பெயரிடப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாக உள்ள ஆம்பன் புயல், வரும் 20ம் தேதி மேற்கு வங்காளம்- வங்காளத் தேசத்தை ஒட்டிய கடற்பகுதியில் கரை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
புயல் காரணமாக வங்கக் கடல் பகுதியில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். புயலால் தென் கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்யும்.