மே பதின்நான்காம் நாளில்
முள்ளிவாய்க்கால்!
தேடிக் களம்புகுந்து தொடர்வெற்றி பலகண்டு
மீட்டெடுத்த தமிழரின் வாழ்விடங்கள் எல்லாமே
விட்டிழந்த வேதனையில் வேங்கையர் படும்பாட்டை
கொட்டியிங்கே சொல்லிவிட எட்டவில்லை வார்த்தைகளோ!
போர்நிறுத்தம் பேச்செல்லாம் பொய்யாகிப் போனதாலே..
கொண்ட கொள்கையில் இன்றும் உறுதுயாய்
குண்டும் உடலுமாய்க் கொதித்த மனத்தோடும்
கண்டோம் எங்களின் காவல் தெய்வங்களை!
நிற்க நேரமின்றி நெடும்போரில் புலியாகி
பக்க நிலைகளிலும் பகலிரவாய் போராடி
மக்கள் துயர்கண்டு மனங்குமுறிப் புலிமறவர்
நிற்குமிடமெல்லாம் நெருப்பாகி எரிந்தார்கள்!
ஒப்பனைக்குள்ளே அடங்காத அப்பெரு வீரனின்….
ஒற்றைத் துப்பாக்கி ஒலித்தான புலிவீரம்
இப்போ இங்கே முடிவுறப் போகிறதோ!
அப்போ எனி எப்பாடோ தமிழினம் என்றும் அழுதனரே!
யார் கண்டார்!
உலகில்
யார் கேட்டார்!
அது முள்ளிவாய்க்காலில்
மே பதின்நான்காம் நாள்.
-வன்னியூர் குரூஸ்-