இனவாதம் பேசுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை – ஜனாதிபதி உத்தரவு

293 0

mahinda-rajapaksa-will-be-defeated-again-sri-lankan-president-maithripala-sirisenaநாட்டில் இனிமேல் இனவாதம் பேசும் அனைவருக்கும் எதிராக, தயவு தாட்சண்யம், இனமத பேதங்கள் பார்க்காமல், நடவடிக்கை எடுக்க பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டார்.

பாதுகாப்பு சபை கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது.

கூட்டத்தில் நாட்டில் இனவாதத்தை தூண்டிவிடும் நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவரது கருத்துகளையும் செவிமடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு உத்தரவிட்டார்.