முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் ஆகியோர் விசாரணை ஒன்றுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச மகளிர் தினமான கடந்த மார்ச் 08ஆம் திகதியன்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட மகளிர் அணியின் ஏற்பாட்டில் தமிழ் தேசிய மகளிர் தின நிகழ்வுகள் பசுமைப் பூங்கா வளாகத்தில் நடத்தப்பட்டிருந்தது.
குறித்த நிகழ்வில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படங்கள் தொடர்பாக கொக்காவில் இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினரால் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதாகக் கூறி கடந்த மார்ச் 13 ஆம் திகதியன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனும் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் அவர்களும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த விசாரணை நடைபெற்று இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அதேவிடயம் தொடர்பிலான மேலதிக விசாரணைக்காக இன்றைய தினம் பொலிஸ் நிலையத்திற்கு சமூகமளிக்குமறிக்குமாறு நேற்று இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.