வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு வாக்களிப்பதற்கான வாய்ப்புக்களை வழங்குவது குறித்து விசேட பாராளுமன்ற குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
இதன்படி குறித்த குழுவில் 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல தலைமையில் இந்த குழு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.