மஹிந்த ராஜபக்ஸவுடன் நரிகள் இருப்பதனால்தான் அவர் கடந்த தேர்தலில் தோல்வியடைந்தார்.
இந்த நரிகளை பயன்படுத்தியே தான் தொடர்ந்தும் சிங்கமாக செயற்படுகின்றேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தந்தையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினருமான டீ.ஏ. ராஜபக்ஸவின் நினைவு தின நிகழ்வில் கலந்துகொள்ள சென்றிந்த வேளையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தனக்கு அரசியல் பிரவேசத்தைப் பெற்றுத் தந்தவர் என்ற வகையில் அவருக்கு மரியாதை செலுத்தும் முகமாகவே வருகை தந்தேன்.
வேட்பாளர் பட்டியலில் பெயர் போட்டுக் கொள்வதற்காக தான் வரவில்லை. மஹிந்த ராஜபக்ஸவுடன் நரிகள் இருபதனால்தான் அவர் கடந்த தேர்தலில் தோல்வியடைந்தார் எனவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டார்.