இந்திய கடல்எல்லையில் வைத்து தமிழக மீனவர்கள் இருவர் இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி பிரயோகத்துக்கு உள்ளாகி காயமடைந்தமை குறித்து தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் வெளியிட்டுள்ளன.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி ஆகியன இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளன.
அத்துடன் இந்த விடயம் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் இந்த கட்சிகள் கோரியுள்ளன.
இந்த நிலையில் புதுடில்லியில் இடம்பெற்ற ராஜதந்திர பேச்சுவார்த்தையில் வெற்றிக்காண முடியாது என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் செயலாளர் வை.கோபாலசுவாமி தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் ராமதாஸ், இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கை ஒரு குற்றவியல் சம்பவம் என்று குற்றம் சுமத்தியுள்ளார்.